இரண்டாம் திருமணம் செய்து மனைவியோடு வந்த கணவன்: முதல் மனைவி காவல்நிலையத்தில் செய்த செயல்!!

481

இந்தியாவில்…

இந்தியாவில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவனை மனைவி, காவல்நிலையத்திலே வைத்து அடித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் Hoshangabad-ன் Itarsi-யில் வசிக்கும் Chandrakant Rohar என்பவர் தன்னுடைய முதல் மனைவியை விவகாரத்து செய்துவிட்டு, இப்போது மீண்டும் இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார்.

ஆனால், விவாகரத்து செய்து கொண்ட அவரின் முதல் மனைவியோ, இந்த விவாகரத்தை நிறுத்துவதற்காக, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.இதற்கிடையில், அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால், இது குறித்து அப்பெண் காவல்நிலயத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, பொலிசார் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட Chandrakant Rohar-ஐயும், இவரின் முதல் மனைவியையும் காவல்நிலையத்திற்கு அழைத்துள்ளனர்.

அப்போது இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போது, Chandrakant Rohar தான் சொல்வது தான் சரி என்பது போல் விடாப்பிடியாக இருந்ததால், ஒரு கட்டத்தில் கடும் கோபம் அடைந்த அவரின் முதல் மனைவி, காவல்நிலையம் என்று கூட பார்க்காமல், அவரை அடிக்கத் துவங்கினார்.

அவரை தர தரவென இழுத்து அடிக்க, இதைக் கண்ட அங்கிருந்த பொலிசார் உடனடியாக சண்டையை தடுத்து நிறுத்தி, இருவரையும் சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

இதை சட்டப்படி சந்தித்துக் கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.