இரவு முழுவதும் மற்றவர்களுடன் போனில் உரையாடல்.. சந்தேக கணவனால் நேர்ந்த விபரீத சம்பவம்!!

963

செங்கல்பட்டு…….

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவரது மனைவி நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சுதாமதி. இவருக்கு வயது 25.

இருவரும் மறைமலை நகரில் தனியார் கம்பெனியில் பணி புரியும் போது காதலித்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் தனது மனைவி துணிகளை அயன் செய்தபோது மின்சாரம் தாக்கி இறந்ததாகக் கூறி சுதாமதிக்கு ரஞ்சித்குமார் இறுதிச்சடங்கு செய்தார். சந்தேகமடைந்த சுதாமதியின் சகோதரர் மதுராந்தகம் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையின் போது சுதா மதியின் தலையில் பலத்த காயம் மற்றும் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்ததாக மருத்துவரின் ஆய்வறிக்கையில் தகவல் வெளியானது.

பின்பு ரஞ்சித்குமாரிடம் விசாரித்தபோது, மனைவி சில நபருடன் அதிக நேரம் போன் பேசிக்கொண்டிருந்ததால் கட்டையை எடுத்து தலையில் தாக்கியது தெரியவந்தது. பின்பு ரஞ்சித்குமாரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.