இரா ணுவத்துடன் தொடர்பு.. அமெரிக்காவில் சீன ஆராய்ச்சியாளர் கை து..! வெளியான முழு பின்னணி!!

369

சான் பிரான்சிஸ்கோவில் உள்ள சீனாவின் துணைத் தூதரகத்தில் அமெரிக்கா அதிகாரிகளிடம் தஞ்சம் புகுந்த சீன ஆராய்ச்சியாளர் இப்போது அமெரிக்கக் கா வலில் உள்ளார், திங்களன்று நீ திமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று அமெரிக்க நீதித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வாரம் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அமெரிக்க மா வட்ட நீதிமன்றத்தில் தா க்கல் செய்யப்பட்ட தகவல்களின்படி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த ஜுவான் டாங், சீன இராணுவத்தில் பணியாற்றவில்லை என்று தனது விசா விண்ணப்பத்தில் பொய்யாகக் கூறினார். அவர் மீது ஜூன் 26 அன்று விசா மோ சடி கு ற்றச்சாட்டு சு மத்தப்பட்டது.

இந்த வ ழக்கு குறித்து சீன தூதரகம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

வியாழக்கிழமை இரவு டாங் த டுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் ஒரு தூதரக அதிகாரியாக அறிவிக்கப்படாததால் தூதரகத்திடமிருந்து எந்த எ திர்ப்பும் இல்லை என்றும் நீ தித்துறை மூ த்த அ திகாரி தெரிவித்தார்.

வி சாவுக்கு வி ண்ணப்பிக்கும்போது தங்களது இ ராணுவ உறவை ம றைத்த குழுவின் ஒரு பகுதியாக டாங் இருப்பதாக அந்த அதிகாரி கூறினார்.

கலிபோர்னியாவின் கிழக்கு மா வட்டத்தில் உள்ள அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகத்தின் செ ய்தித் தொடர்பாளர் லாரன் ஹார்வுட், டாங் சாக்ரமென்டோவில் திங்களன்று நீ திமன்றத்தில் ஆ ஜர்படுத்தப்படுவார் என்று கூறினார்.

அமெரிக்க- சீன உறவுகள் மோ சமடைந்து வருவதற்கு மத்தியில் ஆய்வாளரின் கை து நிகழ்ந்தது. சீனா தனது ஹூஸ்டன் தூதரகத்தை மூட வேண்டும் என்ற அமெரிக்க உத்தரவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக செங்குவில் உள்ள தனது துணைத் தூ தரகத்தை மூடுமாறு சீனா வெள்ளிக்கிழமை அமெரிக்காவிற்கு உ த்தரவிட்டது.