இறந்த தாயின் சடலத்தை உயிருடன் எழுப்ப முயற்சி..! உள்ளே சென்ற ஆட்டோ ஓட்டுனருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

743

தாயின் சடலத்தை உயிருடன் எழுப்ப முயற்சி…..

உயிரிழந்த தனது தாய்யை கடவுள் எப்படியும் மீண்டும் உயிர்பிழைக்கவைத்துவிடுவார் என்ற நம்பிக்கையில் தாயின் சடலத்தின் முன் அமர்ந்து டாக்டர் மகள் மூன்று நாள் ஜெபம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் செருவலச்சேரியைச் சேர்ந்தவர் கவிதா. ஹோமியோபதி டாக்டரான கவிதா தனது தாய் ஓமனா உடனே ஒரே வீட்டில் வசித்துவந்துள்ளார். இவர்கள் இருவரும் சமீபத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இவர்களுடன் புழங்குவதை நிறுத்தி கொண்டுள்ளனர்.

இதனால் தாய், மகள் என்பதை தாண்டி இவர்களை பார்த்துக்கொள்ளவே, கவலைப்படவோ யாரும் இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் ஏற்கனவே சர்க்கரை வியாதியினால் ஓமனாவின் ஒரு கால் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் படுத்த படுக்கையாக இருந்த அவர் கடந்த ஞாயிற்று கிழமை உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த தனது தாய்யை கடவுள் எப்படியும் மீண்டும் உயிர்பிழைக்கவைத்துவிடுவார் என்ற நம்பிக்கையில் தாயின் சடலத்தின் முன் அமர்ந்து டாக்டர் மகள் மூன்று நாள் ஜெபம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய் இறந்த செய்தியை வெளியே யாரிடமும் கூறாமல், தாயின் சடலத்தின் அருகே அமர்ந்து மூன்று நாட்களா சாப்பாடு இல்லாமல், தண்ணி இல்லாமல் தொடர்ச்சியாக ஜெபம் செய்துள்ளார் கவிதா. எப்படியும் கடவுள் தனது தாய்யை மீண்டும் உயிருடன் கொட்டுவந்துவிடுவார் என நம்பியுள்ளார் கவிதா.

இதனிடையே வழக்கம்போல் கவிதாவை ஆட்டோவில் அழைத்துச்செல்லும் ஆட்டோ ஓட்டுநர் எதார்த்தமாக கவிதாவின் வீட்டிற்கு சென்றநிலையில் அங்கு நடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்க, அங்கு வந்த போலீசார் கவிதாவை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு ஓமனாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

ஒரு ஹோமியோபதி மருதுவாரக இருந்தும் இறந்து மூன்று நாட்கள் ஆன தனது தாய் மீண்டும் உயிருடன் எழுந்து வருவார் என சடலத்தின் முன் அமர்ந்து ஜெபம் செய்த அனைவரையும் அதிர்ச்சியடையவைத்துள்ளது.