இறந்த மகளுக்காக கல்லறையை ஐபோனாக மாற்றிய தந்தை : நெகிழ்ச்சி சம்பவம்!!

597

கல்லறை

ரஸ்யாவில் தந்தை ஒருவர் இறந்த தன்னுடைய மகளுக்காக ஐபோன் வடிவில் கல்லறை அமைத்துள்ள சம்பவம் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த Rita Shameeva என்ற 25 வயதான இளம்பெண் கடந்த 2016-ம் ஆண்டு உயிரிழந்தார். Rita அதிகமாக செல்போனை பயன்படுத்திக்கொண்டு இருப்பவர். அவருக்கு ஐபோன் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று.

இந்த நிலையில் மகள் இறந்து இரண்டு வருடங்களுக்கு பின்னர், அவருடைய தந்தை Rais Shameev ஐபோன் வடிவிலான ஒன்றினை அமைத்து கல்லறையில் பொறுத்தியுள்ளார். மிகவும் வித்தியாசமாக இருக்கும் இந்த கல்லறையினை பார்க்க பொதுமக்கள் பலரும் குவிந்து வருகின்றனர்.

இதுகுறித்து வடிவமைப்பாளர் Ilgam Galliulin கூறுகையில், நாங்கள் அந்த ஐபோனை கருங்கல்லை கொண்டு வடிவமைத்துள்ளோம். அந்த வடிவமைப்பு பலரும் பிடித்துப்போனதால் தற்போது ஏராளமானோர் வித்யாசமாக நிறைய ஆர்டர்களை கொடுக்கின்றனர். எங்களுக்கு மிகவும் வியப்பாக உள்ளது என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.