இறுக்கமாக கட்டிப்பிடித்து கொண்ட கணவர் : பின்னர் மனைவிக்கு நேர்ந்த சோகம்!!

247

மிசோரம்….

மீது கோபம் வந்தால், சண்டை போடுவார்கள், தாக்குவார்கள், அல்லது பிரிந்துவிடுவார்கள், மிஞ்சி போனால் கொலையே செய்வார்கள்.. ஆனால், இப்படிக்கூட நடக்குமா என்ற அளவுக்கு ஒரு கணவர் ஷாக் தந்துள்ளார்.

மிசோரம் மாநிலத்தில் கடந்த அக்டோபர் மாதம் ஒரு சம்பவம் நடந்தது… தலங் தியாங்கிலிமி என்ற 61 வயது நபர், தன்னுடைய முன்னாள் மனைவியை கொலை செய்ய திட்டம் போட்டார்.

விவாகரத்து பெற்று தனித்தனியாக வாழ்ந்து வந்த போதிலும், முன்னாள் மனைவி மீது கணவனுக்கு கோபம் குறையவில்லை..

அதனால், சம்பவத்தன்று மனைவியை பார்க்க வந்தார்.. அவரிடம் தனக்கு உடம்பு சரியில்லை, உன்னை பார்க்க வேண்டும் போல இருந்தது என்று சொல்லி பாசமாக அவரை கட்டிப்பிடித்துள்ளார்.

அப்போதுதான், இருவருமே வெடித்து சிதறி உயிரிழந்தனர். மனைவியை கொல்வதற்காக மனித வெடிகுண்டாகவே கணவன் உருமாறியது பெருத்த அதிர்ச்சியை அப்போது ஏற்படுத்தியது. இப்போதும் அதுபோலவே ஒரு சம்பவம் நடந்துள்ளது குஜராத்தில்.

ஆராவல்லி மாவட்டம் மெகராஜ் நகரில் வசித்து வருபவர் லாலாபாகி.. 45 வயதாகிறது. இவர் ஒரு கட்டிட தொழிலாளி… மனைவி பெயர் சாராபென்.. 43 வயதாகிறது. கல்யாணம் ஆகி 20 வருடமாகிறது.. இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். 20 வருடமாகவே மனைவி மீது கணவனுக்கு சந்தேகம் இருந்துள்ளது.. 20 வருடமாகவே இவர்களுக்குள் தகராறும் இருந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 45 நாட்களுக்கு முன்பு மனைவி சாராபென், கணருடன் கோபித்துக் கொண்டு பி.டி.சப்ரா பகுதியில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார்… ஆனாலும் லாலாபாகிக்கு மனசு கேட்கவில்லை… பின்னாடியே மாமியார் வீட்டுக்கு இவரும் சென்றார்..

தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு மனைவியை மனைவியை அழைத்தார்… இதற்கு மனைவி மறுப்பு தெரிவித்தார்.. அத்துடன், இத்தனை காலம் தங்களுடைய அளவுக்கு அதிகமாகவே சித்ரவதை செய்து வந்த வேதனையில் இருந்த மாமியார் குடும்பத்தினர், லாலாபாகியை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் உச்சக்கட்ட கோபம் அடைந்த லாலாபாகி, மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார்… அதற்காக அவர் மனித வெடிகுண்டாக மாறவும் முடிவு செய்தார்… சம்பவத்தன்று லாலாபாகி,

தன்னுடைய இடுப்பு பகுதியில் 2 ஜெல்லட்டின் குச்சிகளை சுற்றி வைத்து கட்டி கொண்டார்.. அதற்கு பேட்டரி மூலம் வயரால் கனெக்‌ஷன் தந்தார்.. இடுப்பு பகுதியில் இதெல்லாம் வெளியே தெரியாமல் இருக்க, மேலே சட்டை அணிந்து கொண்டார்.. மறுபடியும் மாமியார் வீட்டுக்கு சென்றார்..

மறுபடியும் மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார்.. மறுபடியும் மனைவி இதற்கு மறுப்பு சொல்லவும், மனைவியை பாய்ந்து போய் இறுக்கமாக கட்டிப்பிடித்து கொண்டார்.. உடனே இடுப்பில் கட்டியிருந்த ஜெலட்டின் குச்சிகளை வெடிக்க செய்தார்..

இதில் 2 பேருமே அதே இடத்தில் படுகாயமடைந்து வெடித்து சிதறி இறந்தனர். இந்த சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தால், 2பேருமே ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ந்து, போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.