புதிய வகை பாம்புகள்..
இலங்கையில் இரண்டு புதிய வகை பாம்புகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் இதனை தெரிவித்துள்ளது.
இந்த பாம்புகள் நக்கிள்ஸில் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் ஹெர்பெட்டாலஜிஸ்ட் (Herpetologist) மெண்டிஸ் விக்கிரமசிங்க இந்த பாம்புகளை கண்டுபிடித்துள்ளார்.
இதனிடையே, இலங்கைக்கு மட்டும் உரித்தான தாசியா ஹாலியானஸ் எனும் உயிரியல் பெயருள்ள தனித்துவம் மிக்க உயிரினம் வன்னிக் காட்டில் வைத்து அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இதற்கு முன்னதாக ஒரு அரிய அல்பினோ மலைப்பாம்பு கலென்பிந்துனுவெவ பகுதியில் உள்ள ரிட்டிகல காட்டில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.