கேபிள் கார்…….
கண்டி நகருக்கும், ஹந்தானை மலைத் தொடருக்கும் இடையே கேபிள் கார் வேலைத்திட்டமொன்று ஆரம்பமாகவுள்ளது.
அதனை கொரிய நாட்டிலிருந்து வெளியாகும் கொரியன் ஹெரல்ட் ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இதன்படி குறித்த வேலைத்திட்டத்தை 71 வயதுடைய கொரியப் பிரஜை தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ,சுமார் 35 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள இந்த வேலைத்திட்டம் அடுத்த வருடத்தில் ஆரம்பமாகி 2022ஆம் ஆண்டில் நிறைவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.