விசித்திரமான கோழி முட்டை..
பலாங்கொடை நகரத்தில் உள்ள கடை ஒன்றில் விசித்திரமான கோழி முட்டை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுரக்காய் வடிவத்தில் இந்த முட்டை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பலாங்கொடை நகரில் வாராந்த சந்தைக்கு அருகில் முட்டை விற்பனை செய்த நபர் ஒருவரிடமே இந்த முட்டை கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. சாதாரணமான முட்டை கோள வடிவமுடையது.
ஆனால் இம்முட்டையோ ஊதிய பலூன் போன்ற வடிவத்தில் இருப்பதால் இந்த முட்டையின் புகைப்படங்கள் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.