இலங்கையில் கொரோனா ஆபத்து : விரைவில் அறிமுகமாகும் மொபைல் செயலி!!

359

மொபைல் செயலி..

தொடர்புத் தடமறிதலுக்காகவும், கொரோனா வைரஸ் அதிக ஆபத்துள்ள பகுதிகளின் பயனர்களை எச்சரிக்கவும் மொபைல் அடிப்படையிலான App ஒன்று உருவாக்கப்படவுள்ளது.

கொரோனா தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

இந்த Appஇல் பல அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும் என அவர் கூறியுள்ளார். அதிக ஆபத்துள்ள பகுதிகள் குறித்து பயனர்களை எச்சரிக்க இந்த App உதவும் என்று அவர் கூறினார்.

இந்த App எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அறிவுறுத்தலின் பேரில் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சமீபத்தில், மினுவாங்கொடா கொரோனா வைரஸ் கொத்தணியுடன் இணைப்பில் இருந்த நபர்களின் தொடர்புகளை கண்டறிவதில் அதிகாரிகள் சிரமங்களை எதிர்கொண்டனர்.

இந்நிலையில், தொடர்பு தடமறிதலுக்காக மொபைல் App உருவாக்கும் யோசனை கடந்த பல மாதங்களாக விவாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.