இலங்கையில் பெரும் அதிர்ஷ்டம்! 900 ஏக்கர் நிலப்பரப்பில் இரத்தினகல் சுரங்கம்..!

401

இரத்தினகல் சுரங்கம்…

மொனராகல, படல்கும்புர பிரதேசத்தில் உள்ள 900 ஏக்கர் இரத்தினகல் கிடங்கினை தோண் டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கான நடவடிக்கையை அடுத்த வாரத்தில் ஆரம்பிக்கவுள்ளதாக இரத்தினகல் மற்றும் தங்க நகை அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கும்புக்கன் ஓயா நீர்பாசன திட்டத்தை செயற்படுத்துவதற்காக கண்டுபிடிக்கப்பட்டுள்ள படல்கும்புர பிரதேச செயலகத்திற்கான காணியில் இந்த இரத்தினகல் கிடங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

900 ஏக்கர் நிலப்பரப்பில் 500 ஏக்கர் காணி அரசாங்கத்திற்கு சொந்தமான இடமாகும். மீதமுள்ள 400 ஏக்கர் காணி உரிமம் பெற்ற நிலங்கள் என இரத்தினகல் மற்றும் தங்க நகை அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அந்த காணிகளில் உரிமம் பெற்ற நபர்கள் இரத்தினகல் அகழ்வு செய்வதற்கு தேவையான அனுமதி பத்திரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.