இலங்கையில் மனைவியுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கும் பிக்பாஸ் பிரபலம்!!

1706

பிக்பாஸ் எனும் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கணேஸ் வெங்கட்ராமன் மற்றும் அவரது மனைவி நிஷா ஆகியோர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர்.

திருமண நிகழ்வு ஒன்றுக்காக இலங்கைக்கு வந்த இவர்கள் யாழ். நல்லூர் முருகன் ஆலயத்திற்கு முன் நின்று எடுத்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது. அந்த வகையில் பெந்தொட்ட என்ற இடத்தில் வைத்து இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.

பெந்தொட்ட சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியுள்ள இவர்கள், தமது அறை அமைந்துள்ள பகுதியை புகைப்படம் எடுத்து, அதை டுவிட்டரில் பதிவிட்டு, “உண்மையில் கடற்கரை ஒரு சொர்க்கம்” என தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், பெந்தொட்டையில் அவர்கள் தங்கியுள்ள சுற்றுலா விடுதியில் உள்ள மீன் தொட்டில் அவர்கள் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.