கப்பல்………
நாட்டின் மிகப் பெரிய கப்பலை கொழும்பு டொக்யார்ட் நிறுவனம் தயாரித்து சாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ஜப்பானின் தனியார் நிறுவனமொன்றிற்காக இந்தக் கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
ஜப்பானின் ஒனோமிச்சி நிறுவனத்துடன் இணைந்து இதற்கான நடவடிக்கையை கொழும்பு டொக்யார்ட் நிறுவனம் மேற்கொண்டுள்ளதுடன். நிறுவனத்தின் 51 சதவீத பங்களிப்பு ஜப்பானுக்கும் 35 சதவீதப் பங்களிப்பு இலங்கையின் அரச நிறுவனமொன்றுக்கும் உரித்தாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
113 தசம் 1 மீற்றர் நீளமான இந்தக் கப்பலின் அகலம் 21 தசம் 5 மீற்றர்களும், ஆழம் 8 தசம் 8 மீற்றர்களும் ஆகும். மணிக்கு 14 தசம் 5 மைல் வேகத்தில் இந்தக் கப்பலால் பயணிக்க முடியுமெனவும், முழுமையாக உள்நாட்டு பொறியியலாளர்களின் பங்களிப்புடன் இந்தக் கப்பல் 21 மாதங்களில் தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.