இளநீர் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது மட்டுமில்லாமல் அதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.அதே போல தேனிலும் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது.இளநீரையும், தேனையும் கலந்து குடித்தால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது.
தயாரிக்கும் முறை:ஒரு டம்ளர் இளநீரில் 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து கொள்ள வேண்டும்.இந்த பானத்தை தினமும் காலையில், உணவு உண்பதற்கு முன் குடிக்க வேண்டும்.
முதுமைத் தோற்றத்திற்கான அறிகுறிகளாக நரை முடி, சுருக்கங்கள், சோர்வு போன்றவை இருக்கின்றன. இத்தகைய அறிகுறிகள் சிலருக்கு இளமையிலேயே தோன்ற ஆரம்பிக்கின்றன. தேன் மற்றும் இளநீரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் செல்கள் சிதைவுறுவதை தாமதப்படுத்தி முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போடும்.
இளநீரில் தேன் கலந்து தினமும் குடித்து வந்தால், அது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி பல்வேறு நோய்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளித்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இளநீரில் தேன் கலந்து குடித்து வந்தால் அது செரிமான பிரச்சனைகளான வயிற்று வலி, இரைப்பை அழற்சி, வயிற்று உப்புசம், அசிடிட்டி போன்றவை ஏற்படாமல் தடுப்பதோடு, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
உடலில் உள்ள குறிப்பிட்ட ஆக்ஸைடுகள் மற்றும் உப்பு போன்றவை சிறுநீரகங்களில் தேங்கி சிறுநீரக கற்களாக உருவாகும். இளநீரில் தேன் கலந்து குடித்து வந்தால், அது சிறுநீரக கற்களைத் தடுப்பதோடு, அதை கரைத்து எளிதில் வெளியேற்றிவிடும்.
ஒருவரது இதயம் ஆரோக்கியமற்றதாக இருந்தால் உடலின் அனைத்து உறுப்புக்களும் அபாயத்திற்கு உட்படும். இளநீர் மற்றும் தேனில் உள்ள கனிமச்சத்துக்கள், இதய தசைகளை வலிமைப்படுத்தி இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
சர்க்கரை நோய் என்பது முற்றிலும் குணமாகாத ஒரு மெட்டபாலிச நோயாகும். இரத்த சர்க்கரை அளவு வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருக்கிறதோ, அந்நிலையில் தான் சர்க்கரை நோய் ஆகும். ஆய்வுகளில் இளநீருடன் தேன் கலந்து தினமும் குடித்து வந்தால் அது இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து சர்க்கரை நோயைத் தடுப்பதாக தெரிய வந்துள்ளது.