இளம்பெண் படுக்கையறையில் வெட்டிக்கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

1041

கேரளா….

கேரளாவின் கண்ணூர் அருகே பானூர் வல்லையில் வீட்டில் இளம்பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கண்ணச்சங்கண்டி வினோத் என்பவரின் மகள் விஷ்ணுபிரியா (23) கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் சனிக்கிழமை பிற்பகல் நடந்துள்ளது.

விஷ்ணுபிரியா பானூரில் உள்ள தனியார் மருத்துவ ஆய்வகத்தில் பணிபுரிந்து வந்தார். வீட்டின் படுக்கையறையில் இவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். கழுத்தை அறுத்தும், கை, உடல்களிலும் வெட்டுக்காயம் உள்ளது கண்டறியப்பட்டது.

இதற்கிடையில், கொலையாளி யார் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. சம்பவத்தின் போது,

​​விஷ்ணு பிரியாவின் வீட்டின் முன் தொப்பி அணிந்து பையுடன் ஒருவர் நடந்து சென்றதாக அக்கம்பக்கத்தினர் போலீசில் தெரிவித்தனர்.
அந்த மர்ம நபர் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் வீடு புகுந்து இளம்பெண் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.