இளம்பெண் மீது அமர்ந்த காவல்துறை அதிகாரி: எழுந்த சர்ச்சை… நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ காட்சி!!

353

இந்தியா…

இந்தியாவில் தரையில் விழுந்த பெண்ணின் மீது ஏறி உட்கார்ந்து அவரை பொலிஸ் அதிகாரி ஒருவர் தாக்கியதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அதன் முழு பின்னணி வெளியாகியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள துர்கதாஸ்பூர் என்ற கிராமத்தில் அங்குள்ளவர்களில் சிலர் சூதாட்டம் ஆடியதாக பொலிசாருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து, அங்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திர படேல் அந்த கும்பலை பிடிக்க முயற்சித்துள்ளார்.

அப்போது, ஷிவம் யாதவ் என்ற வாலிபரை பிடிக்க முயற்சித்தபோது யாதவின் குடும்பத்தாருக்கும், சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திர படேலுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் தள்ளுமுள்ளு மூண்டது.

இந்த சலசலப்பின் போது படேல், யாதவின் மனைவி ஆர்த்தி மீது அமர்ந்து இருப்பதும், அவரது சட்டை காலரை ஆர்த்தி பிடித்து இருப்பதுமான வீடியோ காட்சி இணையத்தில் பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், படேல் ஆர்த்தியை தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் கான்பூரில் பூதாகரமாக வெடிக்கவே, எதிர்க்கட்சிகள் மாநில அரசை கடுமையாக விமர்சித்தனர்.

இதற்கிடையில், கான்பூர் தேஹாட் காவல்துறை கண்காணிப்பாளர் சவுத்ரி, படேலை விசாரித்து வருவதாகவும், தற்காலிகமாக அவரை கான்பூர் காவல் பணியில் இருந்து நிறுத்தி டிரான்ஸ்வர் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், காவல்துறை தரப்பில் யாதவ் குடும்பத்தினர் வைத்துள்ள புகாரை மறுத்துள்ளனர். சம்பவத்தன்று யாதவ் மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க முயற்சித்த போது, யாதவை மட்டும் கைது செய்ய அவரது குடும்பம் தடுத்ததாகவும் பொலிசாரை அவர்கள் தாக்க முயன்றதாகவும் அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளினால் படேல் ஆர்த்தி மீது தவறி விழுந்ததாகவும் கூறியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கான்பூர் பொலிசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக ஆர்த்தி கூறுகையில், படேல் என்னை அடித்து கீழே தள்ளி பின்னர் என் மீது உட்கார்ந்து மீண்டும் அடித்தார். ஷிவனை கைது செய்யாமல் இருக்க அவர் பணம் கேட்டார்,

ஆனால் நாங்கள் பணம் தர மறுக்கவே எங்கள் மீது அவர் ஆத்திரம் கொண்டார். இதையடுத்தே என்னிடம் அநாகரீகமாக நடந்து கொண்டு தாக்கினார் என கூறியுள்ளார்.