இளைஞனின் முகத்தில் ஆசிட்டை வீசிவிட்டு தப்பி ஓடிய பெண் : சிசிடிவி கமெராவில் பதிவான அதிர்ச்சிக் காட்சி!!

425

கேரளா..

இந்தியாவில் இளைஞன் திருமணம் செய்ய மறுத்ததால், இரண்டு குழந்தைகளின் தாய் ஒருவர் அவர் மீது ஆசிட் வீசிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் Poojappura பகுதியை சேர்ந்தவர் அருண் குமார். 29 வயது மதிக்கத்தக்க இவர் அங்கிருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் மூலம் இடுக்கி மாவட்டம், தொடுபுழா பகுதியை சேர்ந்த ஷீபா (33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளைடைவில் காதலாக மாறியுள்ளது.

ஆனால், ஷீபாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. இதை மறைத்து அருண் குமாருடன் பழகி வந்துள்ளார். இந்த விவகாரம், அருண்குமாருக்கு சமீபத்தில் தெரியவர, அவருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டுள்ளார்.

ஆனால், தன்னை திருமணம் செய்தே ஆக வேண்டும் அவரை ஷீபா மிரட்டு வந்துள்ளார். இதனால், அருண் குமார் வேறு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தார். இது, ஷீபாவுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இதனால், சில தினங்களுக்கு முன்பு அருண் குமாரை தொடர்பு கொண்ட ஷீபா, தனக்கு 2 லட்சம் ரூபாய் தந்தால் ஒதுங்கி கொள்வதாக கூறியுள்ளார். வேறு வழியின்றி, கடந்த16-ஆம் திகதி அருண் பணத்துடன் வருவதாக கூறியுள்ளார்.

அதன் படி தொடுபுழா அருகே அடிமாலியில் உள்ள தேவலாயத்தின் அருகில் ஷீபாவை அருண் குமார் சந்தித்து பேசினார். அப்போது, திடீரென ஷீபா தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை அருண் குமார் முகத்தில் வீசினார். ஷீபாவின் முகத்திலும் ஆசிட் பட்டது. இதனால், ஷீபா அங்கிருந்து தப்பி விட்டார். இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி.யில் பதிவாகியுள்ளது.

அதில் ஆசிட் பட்டு வலியால் அருண்குமார் துடி துடிக்கிறார். அதன் பின் அங்கிருந்தவர்களின் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் அவருக்கு ஒரு கண்பார்வை பறிபோனது. ஆசிட் வீசிவிட்டு தப்பிய ஷீபாவை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.