இளைஞரின் தலையை வெட்டி ஊரின் நடுவே வைத்து சென்ற மர்ம கும்பல் : மனதை உலுக்கிய சம்பவம்!!

359

ஒசூர்….

ஒசூர் அருகேயுள்ள எழுவபள்ளி கிராமத்தை சேர்ந்த பிரதீப்புக்கு, சந்திரிகா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

பிரதீப்பின் மனைவி, கர்நாடகாவில் உள்ள அவரது தாயார் வீட்டிற்குச் சென்றதால், பிரதீப் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இந்த நிலையில், மர்ம நபர்கள் சிலர் பிரதீப்பை கொலை செய்து, அவரது தலையை தனியாகத் துண்டித்து, எழுவப்பள்ளி கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் முன்பு வைத்து சென்றனர். இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் பாகலூர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார், பிரதீப்பின் தலையை கைப்பற்றினர். பின்னர் தலை இருந்த இடத்திலிருந்து அரைகிலோ மீட்டர் தொலைவில் பிரதீப்பின் உடலைக் கண்டறிந்தனர்.

இதனையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்த பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சொத்து தகராறு காரணமாக கொலை சம்பவம் அரங்கேறிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் திவீரமாக தேடி வருகின்றனர்.