சமந்தா….
இதை இவ்வளவு சீக்கிரம் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை என இன்ஸ்டாகிராமில் எமோஷனலாக போஸ்ட் போட்டிருக்கிறார் சமந்தா.
சமந்தாவுக்கு செல்லப் பிராணி என்றால் பிடிக்கும். இதையடுத்து தான் ஹாஷ் என்கிற நாயை வாங்கி வளர்த்து வருகிறார். இந்நிலையில் சாஷா என்கிற நாயை அண்மையில் வாங்கினார்.
சாஷா வீட்டிற்கு வந்த பிறகு தான் மிகவும் பிசியாகிவிட்டதாக தெரிவித்தார் சமந்தா. தன் செல்லப் பிள்ளைகளின் புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிடுகிறார்.
இந்நிலையில் ஹாஷும், சாஷாவும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு சமந்தா கூறியிருப்பதாவது,
இதை இவ்வளவு சீக்கிரம் பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லை. எனக்கு தினமும் ஏதாவது புது விஷயத்தை கற்றுக் கொடுக்கிறாய் ஹாஷ்..
பொசசிவ் மற்றும் பிற நாய்களுடன் சேராத நீ இன்று இவ்வளவு சீக்கிரத்தில் அருமையான அண்ணனாக மாறிவிட்டாய். நீ எனக்கு கிடைத்த ஆசிர்வாதம் என தெரிவித்துள்ளார்.
சமந்தா தற்போது அடிக்கடி சைக்கிளிங் செல்கிறார். இன்று காலை சைக்கிளிங் சென்றபோது எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
கெரியரை பொறுத்தவரை விக்னேஷ் சிவன் இ.ய.க்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருக்கிறார். மேலும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவன தயாரிப்பில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
View this post on Instagram