ஈவு இரக்கம் இல்லாமல் கணவன், மாமியார் படுகொலை : தமிழகத்தை உலுக்கிய ஒரு சம்பவம்!!

311

திண்டுக்கல்…..

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள குருக்கலையன்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (42). இவருக்கு திருமணம் ஆகி சுதா என்ற மனைவியும், 5 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. செல்வராஜ் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.

மேலும் பணம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்துள்ளார். கட்டிட வேலைக்கு ஆட்களை அழைத்துச் செல்வதும், தனியாக கட்டிட வேலைகள் பார்த்தும் வந்துள்ளார். இவரது வீட்டுக்கு 1 கி.மீ தூரத்தில் தோட்டத்து வீடு உள்ளது.

இவர்களது தோட்டத்தில் மாடுகளும் உள்ளதால் இரவு காவலுக்கு செல்வமும், தாய் சவுந்திரமும் செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவும் இருவரும் தோட்டக்காவலுக்கு சென்றனர்.

இன்று காலை பால் கறப்பதற்காக வந்த தொழிலாளர்கள் சவுந்தரம்மாளை அழைத்த போது எந்தவித சத்தமும் வரவில்லை. உடனே வீட்டுக்குள் எட்டி பார்த்த போது செல்வராஜூம், அவரது தாயும் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தனர்.

இது குறித்து அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் எரியோடு போலீசாருக்கும் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரிடன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரட்டை கொலை தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும், செல்வத்தின் மனைவி சுபஹர்ஷிணியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால், அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்ததையடுத்து கிடுகிடுப்பிடி விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது.

கொலை செய்யப்பட்ட செல்வம் விவசாய பணிகளோடு, கோபிகிருஷ்ணன் (28) என்பவருடன் சேர்ந்து பைனான்ஸ் செய்து வந்துள்ளார். அப்போது கோபிகிருஷ்ணனுக்கும், சுபஹர்ஷிணிக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.

அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். நாளடைவில் இந்த விவகாரம் கணவர் செல்வத்திற்கும், அவரது தாய் சவுந்தரத்திற்கு தெரிய வந்ததையடுத்து கண்டித்துள்ளனர்.

இதனால் சுபஹர்ஷிணி, கணவர், மாமியாரை கொலை செய்ய கள்ளக்காதலன் கோபிகிருஷ்ணனுடன் திட்டமிட்டார். இதையடுத்து தோட்டக்காவலுக்கு சென்ற கணவர், மாமியாரை வெட்டிக் கொன்றது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். மேலும், இக்கொலை சம்பவத்திற்கு யாரேனும் உதவினார்களா என்றும் எரியோடு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.