உக்ரைன்…
உக்ரைன் மீது ரஷ்யா போ.ர் தா.க்.கு.தல்களை நடத்தும் நிலையில் வேறு நாடுகளை சேர்ந்த பலர் அங்கு சி.க்கி கொண்டு நாட்டில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அதில், இந்திய மற்றும் தமிழக மாணவர்களும் அடங்கும். தமிழ்நாட்டில் இருந்து மருத்துவ படிப்புக்காக ஏராளமான மாணவ-மாணவிகள் உக்ரைன் சென்று உள்ளனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் தவுட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த மாணவி மவுனி சுகிதா (20) என்ற மாணவியும் மருத்துவ படிப்பு படித்து வருகிறார். அவர் உக்ரைனில் இருந்து தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.
அப்போது, ‘உக்ரைனில் போர் ப.தற்றம் தொடங்கியது முதல் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே இந்தியா திரும்ப திட்டமிட்டேன். என்னுடன் தமிழ் மாணவ-மாணவிகள் சுமார் 50 பேரும், இந்திய அளவில் மாணவ-மாணவிகள் 1000 பேரும் இருக்கிறார்கள். உக்ரைனில் 3 எல்லைகளையும் ரா.ணுவம் அடைத்து விட்டது. நாங்கள் லிவ்விவ் நகரில் இருக்கிறோம்.
இங்கிருந்து போலந்து நாடு மிக அருகில் உள்ளது. கார் அல்லது பஸ்சில் கூட சென்று விட முடியும். ஆனால், இங்கு போர் அறிவிப்பு காரணமாக வாடகை கார்கள், பஸ் வசதி, விமான வசதி என்று எதுவும் இல்லை.
தற்போது இந்திய தூதரகம் எங்களை கண்டுகொள்ளவில்லை. முன்கூட்டியே நாங்கள் விமானத்தில் பயணச்சீட்டு வாங்கியபோது கூட முதலில் இந்திய தூதரகத்தைதான் தொடர்பு கொண்டோம்.
எப்படியாவது தூதரக அதிகாரிகள், இந்திய மாணவ-மாணவிகள் சொந்த நாட்டுக்கு வந்துவிட உதவி செய்வார்கள் என நம்பினோம். ஆனால், எங்கள் தொலைபேசி அழைப்புகளை அவர்கள் எடுக்கவே இல்லை.
ஏ.டி.எம். மையங்களுக்கு சென்றால் சுமார் 30 பேர் பணம் எடுத்த நிலையில் ஏ.டி.எம். மையத்தை மூடி விட்டார்கள். எங்களிடம் இருக்கும் பணத்தை வைத்து உணவு வாங்க சென்றால் அங்கும் எதுவும் இல்லை.
நேற்று காலையில் கூட விமானங்கள் பறப்பதை பார்த்தோம். அதற்குள் அ.பாய சங்கு ஒலிக்கப்பட்டு போர் தொடங்கி விட்டார்கள், எங்களை எப்படியாவது மீட்டு செல்லுங்கள்’ என கூறினார்.
மவுனியும் அவர் தந்தை நாகராஜன் பேசிய தொலைபேசி உரையாடல் மனதை க.லங்கடிப்பதாக உ.ருக்கமாக இருந்தது. நாகராஜன் பேசுகையில், தைரியமா இரும்மா! அ.மைச்சர் நடவடிக்கை எடுப்பேன் என்று சொல்லியிருக்கிறார். நாளைக்கு முதல்-அமைச்சரை சந்திக்க இருக்கிறேன். போலந்து வழியாக வந்திரலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்’ என அவரும் ஆ.றுதல் தெரிவித்துள்ளார்.