உடன்பிறந்த தங்கையை கர்பமாக்கிய அண்ணன் : நிலைகுலைந்த பெற்றோர்!!

411

மதுரை…

நாகரீகம் தொடங்கிய காலத்திற்கு முன்பு இருந்தே பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்ச்சியாக நடைபெற்றுத்தான் வருகிறது. ஆனால் சமீபகாலமாக பள்ளி சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளின் எண்ணிக்கை முன்பைவிட பலமடங்கு அதிகமாகி கொண்டிருக்கிறது.

வீட்டில் இருந்தால் தான் பெண்களுக்கு பாதுகாப்பு என்று பலரும் புலம்பிவரும் நிலையில், வீட்டில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை உறுதி செய்யும் சில சம்பவங்களும் அரங்கேறிக்கொண்டும் வருகிறது.

ஆம், அண்ணன் தங்கையை மணப்பது போன்ற நிகழ்வுகள் சில பண்டைக்கால புராணங்களின் புனைகதைகளாக வந்துள்ளது. ஹோலிவுட்டின் உலக புகழ் பெற்ற கேம் ஆப் த்ரோன்ஸ் என்ற தொடரிலும் உடன் பிறந்த அண்ணனே தன் தங்கையுடன் தகாத உறவு வைத்து கொள்வது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும் இன்னும் சில கொரியன் படங்களில் கூட அண்ணன் தங்கை இடையிலான தகாத உறவு இருப்பது போல சித்தரித்து படங்கள் வெளிவந்துள்ளது.

இம்மாதிரியான படங்கள் பண்பாடு கலாச்சாரம் தழைத்தோங்கி வளரும் இந்தியாவில் ஒரு சமூதாய சீர்கேடாகவே பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் தான் சொந்த அண்ணனே தங்கையை பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கியுள்ள சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மதுரையை சேர்ந்த 13 வயது சிறுமி என்பவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி அடிக்கடி தன்னுடன் படிக்கும் தோழியின் வீட்டிற்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அப்படி அவர், தன் தோழியின் வீட்டிற்கு சென்று அங்கு அதிக நேரம் செலவழித்து வந்த நிலையில் 21 வயது நிரம்பிய தோழியின் அண்ணன் சரவணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

அந்த பழக்கத்தில் காரணமாக சரவணன், வீட்டிற்கு வரும் சிறுமியிடம் நீ அழகாய் இருக்கின்றாய், உன்னை திருமணம் செய்து கொள்கின்றேன், என ஆசை வார்த்தை கூறி, சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது போன்று தொடர்ச்சியாக பலமுறை அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார் சரவணன்.

தனக்கு நேர்ந்த இந்த சம்பவத்தை வீட்டில் சொல்வதற்கு பயந்து கொண்டிருந்த சிறுமி, இது குறித்து தனது சொந்த அண்ணனிடன் கூறியுள்ளார். சிறுமி சொன்னதை கேட்டதும் கொந்தளித்த உடன்பிறந்த அண்ணன், தப்பு உன் மேல் தான் இருக்கும் இரு உன்னை வீட்டில் சொல்லிவிடுகிறேன் என்று மிரட்டியுள்ளார்.

வேண்டாம் என்று சிறுமி கெஞ்ச அவளின் அறியாமையை தனக்கு சாதகமாக பயன் படுத்திக்கொண்டு வீட்டில் சொல்லாமல் இருக்கவேண்டும் என்றால் நான் சொல்வதை செய்யவேண்டும் என்று அவரை மிரட்டி சொந்த தங்கை என்று கூட பாராமல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் கடந்த சில நாட்களாக மாணவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே அவரை பெற்றோர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

சிறுமிக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவரவே, இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை சார்பில் மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்காவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த தகவலை அறிந்தவுடன் மதுரை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் இந்த சம்பவம் குறித்து விசாரிக்கும்படி அவர் உத்தரவு பிறப்பித்தார்.

அவரது உத்தரவின் பேரில், மகளிர் காவல் நிலைய போலீசார், சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது. சிறுமியின் உடன்பிறந்த அண்ணனும் மற்றும் தோழியின் சகோதரனான சரவணனும் தான் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளனர் என்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து, சரவணனையும் சிறுமியின் சகோதரனையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் சிறுமியின் சகோதரனுக்கு 18 வயது நிரம்பாததால் அவருக்கு பெரிய தண்டனை எதுவும் இருக்காது என்று பேசப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.