புனித் ராஜ்குமார்…
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்கள் சற்று முன்னர் மாரடைப்பு காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வந்த நிலையில் சற்று முன்னர் அவர் காலமானதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கன்னட திரையுலகில் மட்டுமின்றி தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பழம்பெரும் நடிகர் ராஜ்குமார் அவர்களின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்தநிலையில் இன்று காலை 11 மணி அளவில் திடீரென புனித் ராஜ்குமார் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியான நிலையில் சற்று முன் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து பெங்களூரு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் பெங்களூருவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.