உடல் எடையை குறைக்க முடியாததால் இளைஞர் எடுத்த அதிர்ச்சி முடிவு!!

838

தமிழகத்தில் உடல் எடையை குறைக்க முடியாத காரணத்தினால் இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் திவாகரன்(29). எம்.சி.ஏ படித்துள்ள இவர் தந்தை உயிரிழந்த காரணத்தினால் தாயுடன் ஆவடியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் உடல் எடை அதிகமானதால், உடல் ரீதியான பாதிப்புகளை சந்தித்து வந்துள்ளார். இதனால் உடல் எடையை குறைப்பதற்கு பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வந்துள்ளார்.

இருப்பினும் உடல் எடை குறையாத காரணத்தினால் மனமுடைந்த இவர், இன்று காலை சென்னை நேப்பியர் பாலம் கூவம் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அப்போது அவர் குதித்த இடத்தில் ஆழம் குறைவாக இருந்ததால், திவாகரன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

இந்த சம்பவத்தை நேரில் கண்டவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்க , தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.