திருநெல்வேலி மாவட்டத்தில் நபர் ஒருவர் உடல் உறுப்புகள் சிதைக்கப்பட்டு நிர்வாணமாக இறந்து கிடந்ததன் பின்னணில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
முத்துபட்டுராஜா என்பவர் ஸ்வீட் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த இவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
முத்துபட்டுராஜா, நிர்வாண நிலையில் இறந்து கிடந்ததால் பெண் தொடர்பு காரணமாக அவர் கொலை செய்யப் பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணங்களில் பொலிசார் விசாரணை நடத்தினர்.
இதில், சுரேஷ் மற்றும் சுபாஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பட்டுராஜா கொலை செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து கைதான இருவரும் பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
நாங்கள் இருவரும் பட்டுராஜாவுடன் சேர்ந்து தான் வேலை பார்த்தோம். இதண்டு மாதங்களுக்கு முன்னர் பட்டுராஜாவால் எங்களது வேலை பறிபோனது.
மேலும், பட்டுராஜாவின் வீட்டுக்கு அருகில் சுரோஷ் வசித்து வந்ததால் அவரது மனைவியை அவ்வப்போது பட்டுராஜா கிண்டல் செய்து வந்துள்ளார்.
இதுகுறித்து பலமுறை எச்சரித்தும் பட்டுராஜா கேட்கவில்லை. ஏற்கனவே வேலை போன கோபத்தில் இருந்ததால், பட்டுராஜாவை கொல்வதற்கு திட்டமிட்டுள்ளனர்.
கடந்த 23ம்தேதி இரவு மதுகுடிக்க அழைத்து சென்றுள்ளனர். பின்னர் போதை தலைக்கேறியதும் நண்பர்கள் இருவரும் பட்டுராஜாவை கொடூரமான முறையில் கொலைசெய்துள்ளனர்.
தற்போது, இவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.