அக்ஷரா…
பிக்பாஸ் சீசன் 5 ல் கலந்து கொண்டிருக்கும் அக்ஷரா ரெட்டி தனது பெயரை மாற்றிக்கொண்டு உள்ளே சென்றுள்ளார் என்றும் அவர் தங்கம் கடத்தினார் என்ற தகவல் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு நெடுவாசல் தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) அதிகாரிகள் இவரை விசாரித்துள்ளனர்.
ஷ்ரவ்யா சுதாகர் என்கிற பெயரால் அறியப்பட்ட அக்ஷரா ரெட்டி அப்போது இந்த விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்திற்கு வந்து தன்னுடைய வாக்கு மூலத்தையும் கொடுத்துள்ளார்.
இந்த தங்கம் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட, ஃபயாஸுக்கும் ஷ்ரவ்யாவுக்கும் இடையிலான தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அக்ஷரா ரெட்டி நான்காவது குற்றவாளியாக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டிருந்தார்.
முக்கிய குற்றவாளியான ஃபயாசுடன் அடிக்கடி துபாய்க்கு பயணம் மேற்கொண்டார் அக்ஷரா, எனவே இவரிடமும் துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணைக்கு பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய ஷ்ரவ்யா (அக்ஷரா ரெட்டி) தனக்கு ஃபயாசை நன்றாக தெரியும் என்றும், ஆனால் அவருடன் சேர்ந்து இந்த விதமான தங்க கடத்தல் மற்றும் சட்டவிரோதமான சீயல்களில் ஈடுபடவில்லை என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது நெட்டிசன்கள் பலர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கை பற்றி பேசிய அக்ஷரா ரெட்டி ஏன் தன்னுடைய உண்மையான பெயரை மறைத்தார் என்றும், இந்த தங்கம் கடத்தல் விவகாரம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசாதது ஏன்? என சரமாரியாக கேள்வி எழுப்பி வருகிறார்கள்.