உனக்கு அவ்வளவு திமிரா! பிரபல நடிகை சங்கீதாவை திட்டிய பிரபல இயக்குனர்!!

589

விஜய்யின் டான்ஸ்க்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் நடிகை சங்கீதாவின் டான்ஸ்க்கு தீவிர ரசிகராம். இருவருக்கும் இடையே குடும்ப உறவு போன்ற நல்ல நட்பு.

சங்கீதா தெலுங்கில் மிக உச்சத்தில் இருந்த நேரம். அப்போது தான் இயக்குனர் பாலா எடுத்த பிதாமகன் படத்தில் கஞ்சா வியாபாரியாக நடித்திருந்தார்.

முதலில் அவருக்கு வாய்ப்பு வந்த போது கையில் 8 படங்கள் இருந்ததால் தேதி கொடுக்க முடியாமல் சங்கீதா பிதாமகன் படத்தை வேண்டாம் என சொல்லிவிட்டார்.

ஆனால் முதலில் அவருக்கு பதிலாக பல நடிகைகள் நடிக்க வைத்து பார்த்திருக்கிறார்கள். ஆனால் யாரும் அந்த கஞ்சா வியாபாரி கேரக்டருக்கு செட்டாகவில்லை.

எதேச்சையாக படப்பிரச்சனையால் ஃபிரீயாக இருந்த சங்கீதா மறுமுறை இயக்குனர் பாலாவை நலம் விசாரிக்க உடனடியாக கிளம்பி மதுரைக்கு வா என சொல்லிவிட்டாராம்.

பின் இவரும் அங்கு செல்ல மேக்கப் போட்டு நடிக்க வைத்திருக்கிறார்கள். அது ஓகே ஆக இது ரியல் அல்ல ட்ரையல் என சொல்லி பாலா அதிர்ச்சி கொடுத்தாராம். படத்தில் நீங்க தான் நடிக்கனும் என சொல்லிவிட்டாராம்.

ஆனால் அதற்கு முன் சங்கீதா படத்தின் கதை பற்றி கேட்ட போது, உனக்கு எவ்வளவு திமிரு? என்கிட்டயே கதை கேட்கிறாய் என நேரடியாகவே உரிமையுடன் கேட்டுவிட்டாராம்.