உனது ஆபாச படத்தை வெளியிடுவேன்… சிறுமியை மிரட்டிய வாலிபர் : பின் நேர்ந்த விபரீதம்!!

457

புதுச்சேரி…

புதுச்சேரியை சேர்ந்த தம்பதியினர் சென்னை துரைப்பாக்கத்தில் வசித்து வந்தனர். அவர்களது மகள் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கணவரை பிரிந்து மனைவி தனது மகளுடன் புதுச்சேரிக்கே சென்றுவிட்டார்.

இவர்கள் முதலியார்பேட்டை பகுதியில் உள்ள அனிதா நகரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த சிறுமிக்கு சென்னையை சேர்ந்த பிரவீன் குமார் வாலிபருக்கு சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இது ஒரு கட்டத்தில் காதலாக மாறியது.

இதனால் இருவரும் வீடியோகால் மூலம் பேசி வந்தனர். இந்நிலையில் சில நாட்களாக சிறுமி அவருடன் பேசுவதை நிறுத்தி உள்ளார். இதனால் கோபமடைந்த அந்த வாலிபர் உனது ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். பின்னர் அவர் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

இந்த புகாரின் பேரில் போலிஸார் போக்சோ வழக்கு பதிவு செய்து வாலிபர் பிரவீன்குமாரை கைது செய்தனர்.