உன்னை கோர்ட்டில் பார்த்துக்கொள்கிறேன் என ஷமி மிரட்டினார்: மனைவி ஹசின் ஜஹான் பரபரப்பு பேட்டி!!

661

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி டேராடூனில் இருந்து டெல்லிக்கு காரில் சென்ற போது விபத்தில் சிக்கினார்.

இதனால் அவருடைய தலையில் காயம் ஏற்பட்டது. டேராடூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அவரை மருத்துவமனையில் சந்தித்துவிட்டு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஹசின் ஜஹான், காயம் அடைந்து உள்ள முகமது ஷமியை சந்திக்க நான் வந்தேன்.

ஆனால் என்னை சந்திக்க மறுத்துவிட்டார். என்னை மிரட்டினார், உன்னை கோர்ட்டில் பார்த்துக்கொள்கிறேன் என்றார்.

எங்களுடைய குழந்தையுடன் விளையாடினார், ஆனால் என்னை ஏற்கவில்லை, அவருடைய தாய் ஒரு பாதுகாவலர் போன்று செயல்படுகிறார் எனவும் குறிப்பிட்டு உள்ளார் ஹசின் ஜஹான்.

எனது கணவர் கடந்த 2 ஆண்டுகளாக கொடுமைப்படுத்தி வருகிறார். என்னை கொலை செய்யக்கூட முயற்சி செய்தார்கள் என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரது மனைவி ஹசின் ஜஹான் பொலிசில் புகார் தெரிவித்தார் என்பது குறிபிடத்தக்கது.