உயரம் 6 அடி…வயது 37… Exchange இல்லை: கணவரை ஆன்லைனில் ஏலம் விட்ட மனைவி… போட்டிபோட்ட பெண்கள்!!

401

நியூசிலாந்தில்..

நியூசிலாந்தில் பெண் ஒருவர் தனது கணவனை ஆன்லைனில் ஏலம் விடுவதாக அறிவித்து இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளார். ஆன்லைனில் பொருட்களை வாங்குவதும், விற்பதும் எளிமையான விஷயம் என்பதால் பலர் ஆன்லைன் வியாபாரத்திற்கே முன்னுரிமை அளிக்கின்றனர்.

குறிப்பாக, கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு ஆன்லைன் மூலம் வாங்குவதும், விற்பனை செய்வதும் சகஜமாகிவிட்டது. ஆனால், நியூசிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் கணவனையே ஆன்லைன் ஏலத்தில் விற்பனை செய்வதாக விளம்பரம் செய்த கூத்து அரங்கேறியுள்ளது.

அயர்லாந்தைச் சேர்ந்த லிண்டா மெக்அலிஸ்டர் என்பவர் தனது கணவர் ஜான் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். அவர் விளையாட்டாக ஆன்லைன் தளம் ஒன்றில் தனது கணவனை விற்பனை செய்வதாக விளம்பரம் கொடுத்துள்ளார்.

அதில் ரிட்டன் மற்றும் எக்ஸ்சேஞ்ச் கிடையாது எனத் தெரிவித்த அவர், ஏலம் இப்போது தொடங்குவதாக கூறியுள்ளார். மேலும், ஜான் 6 அடி 1 அங்குலம் உடையவர். அவருக்கு வயது 37. இவரது ஹாபி படப்பிடிப்பு மற்றும் மீன்பிடித்தல். மிகவும் நல்லவர் என்று அந்த ஏல போஸ்டில் குறிப்பிட்டிருந்தார்.

இதனை உண்மையென நம்பிய 12 பெண்கள் ஏலத்தில் பங்கேற்று ஜானை வாங்க முயற்சி செய்தனர். இந்த ஏலம் இந்திய ரூபாயில் 5 ஆயிரம் ரூபாய் வரை சென்றது. பின்னர் சில மணி நேரங்களில் அந்த போஸ்டை மெக் அலிஸ்டர் நீக்கினார். கணவனை பெண் ஒருவர் ஆன்லைன் ஏலத்தில் விட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.