உயிருக்கு போராடும் 8 வயது சிறுமி.. இரு சிறுவர்களின் கொடூர செயல் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

391

டெல்லி…

டெல்லி சாஸ்திரி பூங்கா பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து டெல்லி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பல திடிக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதாவது வடகிழக்கு டெல்லியின் சாஸ்திரி பூங்கா பகுதியில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது,

அப்பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள் 8 வயது சிறுமியிடம் சென்று ஆசை வார்த்தை கூறி அருகில் உள்ள காலி வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்து தப்பி வீட்டிற்கு ஓடிவந்த சிறுமி, தாயிடம் நடந்த சம்பவம் குறித்து அழுதபடியே கூறியுள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில், சாஸ்திரி பூங்காவில் வசித்து வரும் சிறுவர்கள் இரண்டு பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டதாக போலீசார் தகவல் தெரிவித்தனர்.

பின்னர் இதுகுறித்து டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் கூறியபோது, 8 வயது சிறுமி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அவரது தனிப்பட்ட உறுப்புகளில் கடுமையான சேதம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார், இதனால் குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று மகளிர் ஆணையத் தலைவர் கூறியுள்ளார்.