உலகின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புக் கொண்ட மனிதரின் முடிவை மாற்றிய காதல்!!

672

தலை மாற்று அறுவை சிகிச்சை

ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவர், உலகின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சைக்காக தனது தலையை அர்ப்பணிக்க திட்டமிட்டிருந்த நிலையில், அவர் மனதை கொள்ளை கொண்ட ஒரு பெண்ணின் காதல் அவரது மனதை மாற்றியிருக்கிறது.

மிகவும் மோசமான உடல் குறைபாடு கொண்டவராகிய Valery Spiridonov (33), டாக்டர் பிராங்கன்ஸ்டைன் என்று அழைக்கப்படும் பேராசிரியர் Sergio Canavero மேற்கொள்ளவிருக்கும் ஒரு அறுவை சிகிச்சை மூலம், தனது தலையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி, வேறொரு ஆரோக்கியமான உடலில் பொருத்துவதற்கு சம்மதித்திருந்தார்.

இது உலகில் முதல் முயற்சியாகும், அது மட்டுமின்றி மிகவும் ஆபத்தான ஒன்றாகும். ஆனால், தற்போது அந்த பேராசிரியர் தனது திட்டத்தை நிறைவேற்றுவதற்காக சீனாவில் பணம் சேகரித்துக் கொண்டிருக்கிறார். ஏன் இப்படி ஆயிற்று? Spiridonov என்ன ஆனார்? என்று விசாரித்தால், அவர் ஒரு அழகான மனைவியுடனும் அருமையான மகனுடனும் போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

தான் வாழ்ந்து சாதிப்பதற்கு ஒன்றுமில்லை என்று எண்ணிக் கொண்டிருந்த Spiridonov, Anastasia Panfilovaவைச் சந்தித்ததும், அவருக்கு வாழ வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது.

ஒரு வேளை அறுவை சிகிச்சையின்போது ஏதாவது தவறு நேர்ந்துவிட்டால் அழகிய மனைவியையும் அருமை மகனையும் இழக்க வேண்டுமே என அச்சம் நேரிட, தனது தலை மாற்று சிகிச்சையிலிருந்து பின்வாங்கிவிட்டார் Spiridonov.

அதற்குப்பின் பேராசிரியர் Sergio Canaveroவிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை என்று கூறும் Spiridonov, ஒரு நாள் அவர் தனது ஆய்வு குறித்த தகவல்களை வெளியிடுவார் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.