கொலம்பியா…………
கொலம்பியாவை சேர்ந்த விவசாயி ஒருவர், உலகிலேயே அதிக எடைக்கொண்ட மாம்பழத்தை பயிர்செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
பிலிப்பைன்ஸில் கடந்த 2009 ஆம் ஆண்டு விளைந்த 3 கிலோ 435 கிராம் எடைக்கொண்ட ஒரு மாம்பழமே,
இதுவரை கின்னஸ் சாதனையாக இருந்த நிலையில் கொலம்பியாவின் குவாட் பகுதியை சேர்ந்த ஜேர்மன் ஆர்லாண்டோ நோவோவா பரேரா மற்றும் ரெய்னா மரியா மாரோக்யூன் தம்பதியினரின்,
தோட்டத்தில் 4 கிலோ 25கிராம் எடையில் விளைந்த மாம்பழம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.