உலகிலேயே மிக அமைதியான இடம் இது தானாம்! எங்கு இருக்கிறது தெரியுமா?

774

உலகிலேயே மிக அதிகமான இடம் எது என்று அனைவருக்கும் ஒரு கேள்வி மனதில் எழுந்து கொண்டே இருக்கும். அதற்கு பலரும் பலவிதமான பதில்களை கூறுவார்கள்.

ஆனால், உண்மையில் செயற்கை உருவாக்கப்பட்ட ஒரு இடம் தான் உலகளவில் மிகவும் அமைதியான இடம் என கூறப்படுகிறது.ஐக்கிய அமெரிக்காவில் மினசோட்டா பகுதியிலேயே 9 decibel room எனப்படும் இந்த அமைதியறை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அறையானது சப்த அலைகளை கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள காரணத்தினால், இந்த அறைக்குள் செல்லும் ஒருவருடைய நுரையீரல் ஓசை கூட வெளியே கேட்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த அறையில் காணப்படும் இருள் மற்றும் அசாதாரணமான அமைதியின் காரணமாக இதற்குள் செல்பவர்களுக்கு இனம் புரியாத பய உணர்வு உருவாக்கப்படுகின்றது.

மேலும், இரத்த ஓட்டம், இதயத்துடிப்பும் கூட தெளிவாக உணரவைக்கும் இந்த அறையில் உள்ளே செல்பவர்களுக்கு பைத்தியம் உண்டாக்கும் வகையில் ஓர் மாயை உருவாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாசாவின் விண்வெளி வீரர்களை சோதித்துப் பார்ப்பதற்கும் பயன்படுத்தப்படும் இந்த அறையில் அதிகபட்சமாக 45 நிமிடங்கள் மட்டுமே இதுவரையில் ஒருவர் செலவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.