உல்லாசத்துக்கு மறுத்த நண்பன் மனைவிக்கு நடந்த கொடூரம்!!

414

மஹாராஷ்டிரா….

மஹாராஷ்டிரா மன்பாடா காவல் நிலையத்துக்குட்பட்ட தாவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரியா ஷிண்டே (33). இவரது கணவர் கிஷோர் ஷிண்டே (38). இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகன் உள்ளான்.

இந்நிலையில், கடந்த 15 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கணவர் கிஷோர் ஷிண்டே வேலைக்கு கிளம்பியுள்ளார். அப்போது, சுப்ரியா தனக்கு உடம்பு சரியில்லை எனக்கூறியுள்ளார். சரி, ஒய்வு எடு எனக்கூறி கிஷோர் வேளைக்கு சென்றுவிட்டார். மகன் மதியம் 12 அளவில் பள்ளிக்கு சென்றுள்ளான். இதற்கு பிறகு சுப்ரியா வீட்டில் இல்லை என்ற தகவல் வந்துள்ளது.

அதன் பின்னர் மாலை தந்தை, மகன் இருவரும் வீட்டுக்கு வந்தபோது கதவு வெளிப்பக்கமாக பூட்டி கிடந்துள்ளது. மாற்று சாவியை கொண்டு வீட்டை திறந்துவிட்டு சுப்ரியாவை தேடி பார்த்தனர். ஆனால், அவர் கிடைக்கவில்லை.

உடனே கிஷோர் தனது நண்பர் விஷால் தாவார் (28) உடன் சென்று மன்பாடா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகார் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்த கிஷோர் படுக்கையறையில் இருக்கும் கட்டிலுக்கு அடியில் மனைவி சடலமாக இருப்பதை கண்டு அதிர்ந்து போனார். உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

போலீசாரின் விசாரணையில், சம்பவம் நடந்த அன்று கிஷோரின் நண்பர் விஷால் தாவாரின் நடமாட்டம் அங்கு இருந்தது தெரிய வந்தது. மேலும், அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, சுப்ரியாவை விஷால் தாவார் அடிக்கடி பின்தொடர்ந்தார் என்பதும் தெரிய வந்தது. உடனே அவரை பிடித்து விசாரித்ததில் அவர்தான் சுப்ரியாவை கொலை செய்தார் என்பதை கூறி கிஷோர் ஷிண்டேவுக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.

நண்பனின் மனைவியை கொல்ல காரணம் என்ன? என்பதை விவரித்த விஷால் தாவார்… சுப்ரியா ஷிண்டே வீட்டருகே வசித்து வரும் விஷால் தாவார் கிஷோர் ஷிண்டேவிடம் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். இருவரும் குடியிருப்பு பகுதியில் நண்பர்களாக இருந்து வந்தனர்.

இந்நிலையில் நன்பன் மனைவியான சுப்ரியா மீது விஷால் தாவாருக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. எப்படியாவது அவருடன் தகாத உறவை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்ற ஆசையில் விஷால் இருந்து வந்துள்ளார்.

சம்பவம் அன்று வீட்டில் தனியாக இருந்த சுப்ரியாவை நண்பர் விஷால் தாவார் பார்க்க சென்றார். அப்போது, உல்லாசத்துக்கு அவரை முயற்சித்துள்ளார். அதற்கு சுப்ரியா மறுத்து விஷால் தாவாரை வெளியே தள்ளியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த விஷால் தாவார் சுப்ரியாவை தலையில் தாக்கி கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். மேலும், சுப்ரியா மீது விஷாலுக்கு ஆசை இருப்பதை பலமுறை அவர் வெளிப்படுத்தி வந்துள்ளார்.

என்றும் சுப்ரியா அதை கண்டுக்காமல் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், மன்பாடா போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கிஷோரை கைது செய்து மேற்படி விசாரணை நடத்தி வருகின்றனர்.