திருவாரூர்….
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் உள்ள கற்பகநாதர்குளத்தை சேர்ந்தவர் புவனேஷ்வரி இவர் கரையங்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் இளநிலை உதவியாளராக பணிபுரிகின்றார்.
இவரது கணவர் கண்ணன் வெளிநாட்டில் வேலை பார்க்கின்றார். இவர் நேற்று மாலை கோபாலசமுத்திரம் என்ற இடத்தில் டூவீலரில் வந்துக் கொண்டிருந்தபோது ஜாம்புவானோடையை சேர்ந்த மதிவாணன் வழிமறித்து கத்தியால் மார்பு முதுகு கழுத்து ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்தியுள்ளார்.
புவனேஸ்வரியின் அலறல் சத்தத்தை கேட்டு பொதுமக்கள் திரண்டதால் மதிவாணன் தன்னைதானே கத்தியால் கையை அறுத்து கொண்டான்.
இரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரையும் பொதுமக்கள் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.
படுகாயமடைந்த புவனேஸ்வரியை மேல்சிகிச்சைகாக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் மதிவாணனை கைது செய்த முத்துப்பேட்டை போலீசார் தீவீர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் புவனேஷ்வரியின் அம்மா வீட்டுக்கு அருகில் மதிவாணனின் உறவினர் வீடு இருப்பதாகவும், அங்கு சென்றபோது மதிவாணன் புவனேஸ்வரியை பார்த்துள்ளார்.
புவனேஸ்வரியின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்வதை அறிந்து கொண்ட மதிவாணன், தனது ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தியுள்ளார்.
ஒருகட்டத்திற்கு மேல் இந்த பிரச்சனையை தாங்க முடியாத புவனேஸ்வரி, மதிவாணனின் அம்மாவிடம் இந்த விஷத்தை சொல்லியுள்ளார்.
இதை அவமான உணர்ந்த மதிவாணன் இதனால் ஆத்திரத்தில் மதிவாணன் புவனேஸ்வரியை கத்தியால் குத்திவிட்டு தானும் கையை அறுத்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.