ஊட்டியில் லூட்டி அடிக்கும் திவ்யதர்ஷினி லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

586

திவ்யதர்ஷினி..

விஜய் தொலைக்காட்சியில் மிக சின்ன வயசுலயே தொகுப்பாளினியாக வந்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. ஆரம்ப காலத்தில் நடிகர் சிவ கார்த்திகேயனுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். பின் தீபக், அரவிந்த் ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார்.

இவரின் நய்யாண்டி தனமான பேச்சுக்கு ரசிகர்கள் ஏராளம். ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இதற்கு இடையில் சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. சின்ன சின்ன ரோலில் அசத்தி வந்தார். இதனிடையில் இவரின் திருமணம், அதன்பின் விவகாரத்து கொஞ்ச நாள் தொலைக்காட்சியை விட்டு விலகியே இருந்தார்.

அதன்பின் விடுமுறையை கழிப்பதற்காக வெளியூர் பயணம் துபாய் சென்றார். அப்பப்போ ஏதாவது இன்டர்வியு நிகழ்ச்சி மட்டும் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது சுந்தர்.சி உடன் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தின் சூட்டிங் தற்போது ஊட்டியில் படமாகி கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் நடிகர் ஜீவா, நடிகர் ஜெய் மற்றும் சுந்தர்.சி ஆகியோருடன் ஊட்டியில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் சர்ச்சை கலந்த கமென்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.