துயரம்..
இந்தியாவில் கொரோனா பரவலால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் தனது குழந்தைகளுக்கு உணவு இல்லை என்ற விரக்தியில் தாயார் ஒருவர் 5 பிள்ளைகளையும் கங்கை நதியில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் பாதோகி மாவட்டத்தை சேர்ந்த ஒரு தாய் தனது 5 குழந்தைகளையும் கங்கை நதியில் மூழ்கடித்துள்ளார்.
தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று கங்கை நதியில் மூழ்கிய குழந்தைகளை தீயணைப்பு படையினர் உதவியுடன் தேடி வருகின்றனர்.
மேலும் குறித்த பெண்மணியை கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் குறித்த பெண்மணி ஏழ்மையான குடும்பம் எனவும்,
தினக்கூலி வேலைக்கு செல்லும் இவர் கடந்த சில நாட்களாக குழந்தைகளுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்கி கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார் எனவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்தே இந்த கோர முடிவுக்கு அவர் வந்திருக்கலாம் என பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது, உணவு இல்லை என்பதால் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதமும் ஏற்பட்டதாக அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர்.