இந்தியாவில்..
இந்தியாவில் கடந்த பொதுமுடக்கத்தின்போது குருகிராமில் சிக்கிய தனது தந்தையை சைக்கிளிலேயே அழைத்து வந்த சம்பவம் வெகுவாகப் பேசப்பட்ட நிலையில், அந்த சைக்கிள் மகளின் தந்தை மோகன் பாஸ்வான் நேற்று மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
தர்பங்கா மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவர் தியாகராஜன் இந்த தகவலை உறுதி செய்திருப்பதோடு, மாவட்ட நிர்வாகம் தரப்பில் தேவையான உதவிகளை செய்யவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு திடீரென்று எவ்வித முன் ஏற்பாடுகளும் இன்றி மத்திய மோடி அரசால் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் ஆயிரம் கி.மீட்டருக்கும் மேல் சைக்கிளில் தன்னந்தனியாக பயணம் செய்து,
குருகிராமிலிருந்து காயம் பட்டிருந்த தனது தந்தையை தர்மங்காவுக்கு சைக்கிளிலேயே அழைத்து வந்த 16 வயது ஜோதி குமாரி பற்றிய செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டார். இவரைப் பற்றி செய்திகள் வெளியான நிலையில், இவருக்கு மிக மதிப்புள்ள சைக்கிள் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விளையாட்டுத் துறையில் பயிற்சி அளிக்கவும் உதவிகள் குவிந்தன. இந்த நிலையிலேயே தந்தையை மாரடைப்பில் பறிகொடுத்துள்ளார் ஜோதி குமாரி.