கொடூர சம்பவம்
இந்தியாவில் சாலையில் கொட்டிக் கிடந்த பாலை தெரு நாய்களுடன் மனிதரும் பகிர்ந்து கொண்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் ஏப்ரல் 14ம் திகதி வரை விதிக்கப்பட்டிருந்த ஊடரங்கு உத்தரவு தற்போது மே 3ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் பசியால் வாடும் அவல நிலையே நீடிக்கிறது.
இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் சாலையில் கொட்டிகிடந்த பாலை ஒரு பக்கம் நாய்கள், ஒரு பக்கம் மனிதர் என பகிர்ந்து கொள்ளும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஆக்ரா அருகே ராம் பாஹ் சவுரஹா என்ற பகுதியில் பால் கொண்டு சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. இதனை அடுத்து பால் முழுவதும் சாலையில் கொட்டியது. ஆறாக ஓடிய பாலைக் கண்டதும் அங்கிருந்த தெரு நாய்கள் ஓடி வந்து குடிக்கத் தொடங்கின.
அதேநேரத்தில் அந்த வழியாக வந்த நபர் ஒருவர், தான் வைத்திருந்த ஒரு சிறிய பாத்திரத்தில் தரையில் இருந்து பாலை கைகளால் அள்ளி ஊற்றி எடுக்கத் தொடங்கினார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நடந்த இச்சம்பவத்தின் வீடியோ வெளியாகி பார்ப்போரின் கண்களை குளமாக்குகின்றன.