ஹர்தயல் சிங்……….
தனது வாழ்வின் பெரும் பகுதியை மரங்களுக்காக ஒதுக்கிய இயற்கை ஆர்வலர் ஒருவர் ஆக்சிஜன் கிடைக்காமல் உ.யி.ரிழந்த சம்பவம் சோ.க.த்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பட்டியலா மாவட்டத்தில் உள்ள தப்லான் கிராமத்தைச் சேர்ந்தவர் இயற்கை ஆர்வலர் ஹர்தயல் சிங் போக்குவரத்து நிறுவனத்தில் சுருக்கெழுத்தராக பணியாற்றி கடந்த 2013 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
அதன்பின் கடந்த 10 வருடங்களாக 10,000 த்துக்கும் மேற்பட்ட மரங்களை நட்டு அந்தக்கிராமத்தில் ஒரு சிறிய காட்டையே உருவாக்கி விட்டார். இதற்காக தினமும் தனது மிதிவண்டியில் மரங்கன்றுகளையும், அதற்கு தேவையான தண்ணீரையும் எடுத்துச் செல்வாராம்.
இந்நிலையில் கொரோனா தொ.ற்.றால் பா.தி.க்கப்பட்ட ஹர்தயல் சிங்கிற்கு ஆக்சிஜன் கிடைக்க தாமதமானதால் அவர் கடந்த 25 ஆம் தேதி உ.யி.ரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இப்படி மரங்களுக்காக தனது வாழ்வின் பெரும் பகுதியை ஒதுக்கி நேசித்து வந்த ஹர்தியால் சிங்கின் உடல் அவர் வளர்த்த காட்டிலேயே அ.டக்கம் செ.ய்யப்பட்டது.