எட்டாம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த மருத்துவ மாணவர்கள் : வெளியான திடுக்கிடும் தகவல்!!

307

சென்னை….

எட்டாம் வகுப்பு மாணவியுடன் இரவு முழுக்க அத்துமீறிவிட்டு மறுநாள் காலையில் யாருக்கும் தெரியாமல் வீட்டில் இறக்கிவிட்டு வந்த மருத்துவ மாணவர் உட்பட நான்கு பேர் கைதாகியுள்ள சம்பவம் சென்னையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியின் பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்ட நிலையில் பாட்டியின் அரவணைப்பில் சிறுமி வசித்து வருகிறார். வெளிநாட்டில் உள்ள சிறுமியின் தந்தை சிறுமியின் கல்வி மற்றும் பிற செலவுகளை கவனித்து வருவதாக சொல்லப்படுகிறது.

தாய் தந்தை கவனிப்பு இல்லாமல் வீட்டிலும் தனிமையை கழித்து வந்த சிறுமி பள்ளி முடிந்ததும் வெளியே உள்ள பானிபூரி கடைக்கு செல்வது வழக்கம். அப்போது ராமாபுரத்தில் பல் மருத்துவம் பயிலும் வசந்த் கிரீஷ் என்ற மாணவனுடன் சிறுமிக்கு அறிமுகம் ஏற்பட்டு பழக்கமாகியுள்ளது.

அடிக்கடி மாலை நேரத்தில் சந்தித்துக்கொண்ட இருவரும் சகஜமாக பழகியுள்ளனர். ஒருநாள் மாணவியை தான் தங்கியிருக்கும் இடத்திற்கு வசந்த் கிரீஷ் அழைத்து சென்றுள்ளான். அப்போது, அவன் புகைத்து வரும் கஞ்சாவை மாணவிக்கும் கொடுத்து புகைக்க வைத்துள்ளான். இதனால் தலை சொக்கிப்போன சிறுமியை வசந்த் கிரீஷ் பாலியல் பலாத்காரம் செய்து அதை செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டான்.

ஒரு கட்டத்தில் மாணவி கஞ்சா போதைக்கு அடிமையாகவே வசந்த் கிரீஷின் வீட்டிக்கு அடிக்கடி சென்றுள்ளார். அதனை பயன்படுத்திக்கொண்ட வசந்த் கிரீஷ் கஞ்சா போதையில் தன்னிலை மறக்கும் மாணவி மீது கை வைக்காமல் விட்டதில்லை.

ஒரு கட்டத்தில் நள்ளிரவில் மாணவியை அவரது வீட்டுக்கு சென்று அழைத்து கொண்டு தனது இடத்திற்கு வரும் வசந்த் கிரீஷ், மறுநாள் அதிகாலை சிறுமியின் வீட்டில் விட்டு வந்துள்ளார். இப்படி பல நாள் இரவு முழுக்க மாணவிக்கு கஞ்சாவை கொடுத்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளான் வசந்த் கிரீஷ்.

மேலும், தனது நண்பர்களான சினிமாவில் சான்ஸ் தேடி அலையும் ரெஜித், கல்லூரி உதவி பேராசிரியர் பிரசன்னா,தனியார் கல்லூரி மாணவன் விஷால் ஆகியோருக்கும் மாணவியை விருந்தாக்கியுள்ளான்.

மாணவியுடன் நெருக்கமாக இருக்கும்போது எடுத்து வைத்திருந்த வீடியோவை காட்டி நள்ளிரவில் அவரது வீட்டில் வைத்தே சிறுமியை பலாத்காரம் செய்து வந்துள்ளனர். வயதான பாட்டி என்பதால் அவருக்கு தெரியாமலேயே இந்த கொடுமைகள் பல நாட்களாக நடந்துள்ளன.

மேலும், கஞ்சாவுக்கு அடிமையான சிறுமி அடிக்கடி பள்ளிக்கு கட் அடித்து வந்ததால் சந்தேகமடைந்த ஆசிரியர்கள் சிறுமியின் பாட்டிக்கு தெரிய படுத்திய பின்னர் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்நிலையில்தான் சிறுமியின் சித்தி ராமாபுரம் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மருத்துவ மாணவன் வசந்த் கிரீஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.