நாமக்கல் அருகில் 17 வயது சிறுமியின் 8 மாத கருவை கலைக்க அவரது குடும்பத்தினர் முயற்சி செய்த நிலையில் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாமக்கல் அருகே தாய் இல்லாத இந்த சிறுமி தன் தந்தை மற்றும் சகோதரருடன் வாழ்ந்து வந்திருக்கிறார். 9ஆம் வகுப்புவரை படித்த இந்த சிறுமி குடும்ப வறுமை காரணமாக கூலி வேலைக்கு சென்ற இடத்தில சங்கர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கத்தால் கர்ப்பிணியான சிறுமி இந்த தகவலை குடும்பத்தினருக்கு தெரிவிக்கவில்லை. கரு எட்டு மாதம் வளர்ந்த நிலையில் விடயம் தெரிந்த தந்தையும் சகோதரனும் கருக்கலைப்புக்கு மாத்திரை வாங்கி கொடுத்துள்ளனர்.
இதனால் 8 மாத கரு கலைந்த நிலையில் அதிக ரத்தப்போக்குடன் சிறுமி மயங்கி விழுந்து கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தார் ஆம்புலன்சுக்கு போன் செய்து வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சிறுமி தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.