எதிரிக்கு இவர்கள் கொடுக்கும் தண்டனை என்ன தெரியுமா?

1045

மனிதர்களின் தலையை வெட்டும் ஆதிவாசிகள் பற்றி தற்போது தகவல் தெரியவந்துள்ளது. இவர்கள் இந்தியாவில் நாகலாந்து மாநிலத்தில் உள்ள தலை வெட்டிப் பழங்குடியினர் என்று அழைக்க படுகின்றனர்.

இவர்களுக்கு இப்படி பெயர் வரக் காரணம், “எதிரியின் தலையை வெட்டியதும் அதற்கு ஆதாரமாக தங்கள் முகத்தில் பச்சை குத்திக் கொள்ளுவதுதான். இந்த பழங்குடியினரின் கடைசி சந்ததியினர் தற்போதும் 70 வயதுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களை கோன்யாக் பழங்குடியினர் என்றும் அழைக்கின்றனர். மேலும் இவர்கள் தங்கள் எதிரிகளுடன் போரிட்டு வெற்றி பெற்றால், வெற்றி பெற்றதன் அடையாளமாக அவர்களது தலைகளை பரிசுப் பொருட்கள் போல் வைத்துக் கொள்வார்கள்.

1940 களில் கிறிஸ்தவ மதம் நாகலாந்திற்கு வந்தபோது இந்தப் பழக்கம் முடிவுக்கு வந்தது. எதிரி வீர்ர்களின் தலைகளைக் துண்டிப்பது எங்கள் கலாச்சாரத்தின் ஒரு முக்கிய பகுதி என்கிறார் பழங்குடியினரில் ஒருவர்.

தலைகள், பாதங்கள் மற்றும் கைகளை அவர்கள் பரிசாகக் கொண்டு வந்து கிராமத்திலுள்ள பெரிய மரம் ஒன்றில் கட்டித் தொங்க விடுவது அவர்களின் வழக்கம்.

அதேபோல் ஒவ்வொரு வீட்டிலும் பல எருமை மாட்டுத் தலைகள் தொங்கப்பட்டுள்ளன, இது அவர்கள் எத்தனை முறை வேட்டையாடி விருந்து வைத்துள்ளார்கள் என்பதற்கு அடையாளமாம்.அது மட்டுமில்லை, அவர்களை சந்திக்க வருபவர்களை மிகவும் அன்புடன் வரவேற்கிறார்கள், கனிவுடன் உபசரிக்கிறார்கள்.

தங்கள் கலாச்சாரம் பெரிய அளவில் மாற்றம் அடைந்த பின்னரும் தங்கள் கலாச்சாரம் குறித்து மிகுந்த பெருமையுடன் வாழ்கிறார்கள், இந்த தலை வெட்டிப் பழங்குடியினர்.