எதிர்பார்த்த பரீட்சை பெறுபேறு கிடைக்காததால் உயிரை மாய்த்த முல்லைத்தீவு மாணவி!!

667

மாணவி..

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் தான் எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்காததால் மன வி ரக்தி அடைந்த மா ணவி ஒ ருவர் தூ க்கில் தொ ங்கி த ற்கொ லை செய்து உ யிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் முல்லைத்தீவு – சிலாவத்தை பகுதியில் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது . முல்லைத்தீவு – சிலாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்ற சந்திரன் கம்சிகா என்ற 17 வயதுடைய மாணவியே உயிரிழந்துள்ளார்.

நேற்றையதினம் வெளியாகிய சாதாரண தர பரீட்சை பெறுபேற்றில் சிறந்த பெறுபேற்றைப் பெற்று உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் கல்வி கற்க வேண்டும் என்ற ஆவலோடு காத்திருந்த குறித்த மாணவிக்கு,

உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் கல்வி கற்க கூடிய எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் இன்று காலை சே லை ஒ ன்றினால் தூ க்கிட்டு த ற்கொ லை செ ய்துகொண்டுள்ளார் .

குறித்த த ற்கொ லை ச ம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .