எனக்கு திருமணம் வேண்டாம் : மணப்பெண் க ண்ணீருடன் வெளியிட்டுள்ள வீடியோ!!

368

மணப்பெண்…

இந்தியாவில் கழிவறை இல்லாத கிராமத்தில் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட தனது திருமணத்தை தடுத்த நிறுத்த உதவி கோரி வெளியிட்ட வீடியோ வைரலாகியுள்ளது.

அறிவியல் பட்டதாரியான ரீனா சிங் தனது குடும்பத்தினருடன் ஜெய்பூரில் வசித்து வருகிறார். இவரது தந்தை காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் தனது அம்மா, சுர்லா கிராமத்திற்கு தன்னை அழைத்து வந்து தன்னுடைய விருப்பத்திற்கு மாறாக இளைஞர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் செய்து வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

அந்த வீடியோவில் பேசியுள்ள ரீனா, எனது விருப்பத்தை கேட்காமல் ஜுலை 1ம் திகதி திருமணம் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த கிராமத்தில் கழிவறையோ, குளியலறையோ இல்லை.

பெண்களின் பாதுகாப்பிற்கு தேவையான எந்த அம்சமும் இங்கே இருப்பதாக தெரியவில்லை. இங்கே உள்ள பெண்களுக்கு போதிய கல்வியும் வழங்கப்படவில்லை. எனக்கு வேலை கிடைக்கும் வரை திருமணம் செய்யும் யோசனை இல்லை என கூறியுள்ளார்.

தனது திருமணத்தை தடுத்து நிறுத்த உதவி செய்யுமாறு கோரிக்கை வைத்து அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதையடுத்து, இந்த சம்பவம் காவல்துறையினர் கவனத்திற்கும் சென்றுள்ளது.

இதனையடுத்து அந்த கிராமத்திற்கு விரைந்த காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பான அனைத்து தகவல்களையும் சேகரித்துள்ளனர்.

மேலும் ஜூலை 1ம் திகதி நடக்கவிருந்த திருமணத்தை ரத்து செய்வதாக பெண்ணின் குடும்பத்தினரிடம் எழுதி வாங்கியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.