“எனக்கு வலிப்பு நோய் இருக்கு” இளம்பெண் எடுத்த விபரீத முடிவால் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

312

வேலூர்….

வேலூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகொண்டா காமராஜர் நகரில் ஜெயவர்தன் என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகன் சரவணனுக்கும், ஜெயவர்த்தனின் சகோதரி மகள் தனுஷியாவிற்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இதில் தனுஷியாவிற்கு அடிக்கடி வலிப்பு ஏற்பட்டு வந்ததால் அதற்காக அவர் மருந்து சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில் தனுஷியாவின் பெற்றோர் அவரை பார்ப்பதற்கு வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது தனுஷியா தனது அறையிலுள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு சடலமாக தொங்கிக் கொண்டிருந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தனுஷியா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்த பள்ளிகொண்டா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு ஒரு அங்கு சென்று தனுஷியாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு தனுஷியாவிற்கு திருமணமாகி 1 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.