தனது மகள் ஆராத்யா பிறந்தவுடன் முன்பு போல் படங்களில் நடிக்க முடியுமா என ஐஸ்வர்யா ராய் சந்தேகப்பட்டதாக கூறியுள்ளார் அபிஷேக் பச்சன்.
அவர் மேலும் கூறுகையில், ஐஸ்வர்யா ராய் கர்ப்பம் ஆனதிலிருந்து படங்களில் நடிக்காமல் வீட்டிலேயே இருந்தார். மகள் ஆராத்யா பிறந்து இரண்டு வருடங்கள் கழித்துதான் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
மகள் பிறந்த பின் தன்னால் முன்பு போல் நடிக்க முடியுமா? மீண்டும் பழைய புகழ் கிடைக்குமா? என்கிற சந்தேகம் ஐஸ்வர்யாவிற்கு இருந்தது, அவருக்கு ஆதரவாக இருந்து நம்பிக்கை தந்து உதவியதாக தெரிவித்துள்ளார்.
இதேபோன்று தானும் இரண்டு வருடங்கள் இடைவெளி எடுத்துக் கொண்ட போது குடும்பம் ஆதரவாக இருந்தது என கூறியுள்ள அபிஷேக் பச்சன், தற்போது அனுராக் காஷ்யப்புடன் முதல் முறையாக இணைந்து மன்மர்ஷியான் எனும் படத்தில் நடித்து வருவதாகவும் கூறியுள்ளார்.