நீதா அம்பானி
இந்தியாவின் பணக்காரப் பெண்மணிகளுள் ஒருவரான நீதா அம்பானி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ரிலையன்சு இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேசு அம்பானியின் மனைவி நீதா அம்பானி. இவர் தொழில்நுட்பம், இதர வியாபார நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதன் மூலம் தினம்தோறும் செய்திகளில் இடம்பிடித்து விடுகிறார்.
நீதா அம்பானி என்னதான் இந்தியாவின் பணக்காரப் பெண்மணிகளுள் ஒருவராக இருந்தாலும், இவர் சமீபத்தில் சர்வதேச பள்ளியின் ஆண்டுவிழாவில் கலந்துகொண்ட புகைப்படங்களில் ஆடை பற்றிய சர்ச்சைகள் எழுந்துள்ளன.
காரணம் என்னவென்றால், அன்றைய தினம் அணிந்திருந்த அதே ஆடையை, சமீபத்தில நடைபெற்ற 2019ம் ஆண்டிற்கான ஐபிஎல் வீரர்கள் ஏலத்தின் போதும் அணிந்திருந்தார்.
ஆடைகளுக்கு மட்டுமே அதிகப்படியாக இரண்டு கோடி செலவிடும் நிதா அம்பானி, ஒரே அடையினை அடுத்தடுத்த நிகழ்வுகளில் அணிந்திருப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.