என்னை மிரட்டி திருமணம் செய்தார் – முதல் மனைவி மீது கலக்கப்போவது யாரு நவீன் குற்றச்சாட்டு!!

570

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நவீன். இவருக்கு நேற்று திருமண வரவேற்பு நடைபெற்றது. அப்போது அவர் ஏற்கனவே திருமணமானவர் என அவரது முதல் மனைவி திவ்யா போலிஸ் மூலம் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினார். அவர் கைதானதாகவும் கூறப்பட்டது.

இதுபற்றி நம்மை தொடர்பு கொண்ட நவீன் இதை மறுத்துள்ளார். நான் கைதாகவில்லை, திவ்யாவுடன் பழகியது உண்மைதான். அவர் என்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்தார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமானதும் என்னிடமிருந்து பணம் பறிப்பதிலேயே குறியாக இருந்தார். இதனால் தான் அவரை விட்டு விலகினேன் என்று கூறியுள்ளார்.

அவரின் உண்மை முகம் பற்றிய ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. விரைவில் அதை வெளியிடுவேன் என்றும் கூறியுள்ளார்.